Monday, September 13, 2010

மொழி

நேற்று நானும் ஆதியும் வாசிமலை அவர்களின் மகள் திருமணத்திற்கு சென்றிருந்தோம். ஆதி அவ்வளவாக பேசாமல் என்பின்னடியே இருந்தான் (புதிய இடம், நிறைய புதுமக்கள் என்பதால்). திருமண வரவேற்பு நிகழ்சிகள் ஒருவாறாக முடிந்து நண்பர்கள் கூடி பேசிகொண்டிருந்தோம். சந்தானம் சார் , ஆதிக்கு எத்தனை வயது என்று கேட்டார்கள். நான் சொன்னேன் 2 வயதும் 5 மாதங்களும் என்று. சந்தானம் சார் தொடர்ந்தார், அப்போ செப்டம்பர் ல பள்ளிக்கு போவானா? இல்லை நான்கு வயதுக்கு மேல் LKG படிக்கட்டும் என்றேன். உடனே அருகில் இருந்த நண்பர் சொன்னார் என் மகள் இரண்டரை வயதில் பள்ளிக்கு சென்று விட்டாள், என்னாமா பேசுறா தெரியுமா...நீங்களும் அப்படியே செய்யுங்கள் என்றார். 
என் கணவர் சில மாதங்களுக்கு முன்னால் இது பற்றி பேசும்போது கூறினார்... "எப்படியோ பள்ளிகூடத்தில் சேர்ந்த பின்னால் அவனுடைய வாழ்வில் பள்ளி, வீட்டுபாடம், டியூஷன்...விளையாடவே நேரம் இருக்காது. அதுவரை சுதந்திரமாக இருக்கட்டும், சொந்தம், பந்தம், விளையாட்டு என்று வாழ்கையை அனுபவிக்கட்டும்." அது நான்கு வயது வரையிருக்கட்டும் என்று பகிர்ந்தேன். 
இந்த கருத்தை அறிவுரை கூறிய நண்பரிடம் சொன்னேன். எனக்கு என் மகனை பற்றி சொன்னேன், ஆதிக்கு, நிறைய விலங்குகள் தெரியும், ஆடு, மாடு, கோழி, செடிகள் அடையாளம் கண்டுபிடிக்கதேரியும் என்று.. அவன் கையிலிருந்ததோ ஒரு விளையாட்டோ சாமான் (educative toy). Giraffe என்று எழுதி இருந்தது - அதை பார்த்தவுடனே ஒட்டகசிவிங்கி என்று உற்ச்சாகமானான். அடுத்து zebra - வரிக்குதிரை என்றான், எப்படி ஆங்கிலத்தில் எழுதிருந்த படங்களை தமிழிலே சொன்னான், இப்படி பல வார்த்தைகளை சொல்லிக்கொண்டே இருந்தான். 
நான் அந்த நண்பரை பார்த்து கூறினேன், ஆதிக்கு, தமிழில் கஷ்டமான வார்த்தைகள் சில தெரியும், ஆனால், சாதாரண ஆங்கில வார்த்தை கூட ஆதிக்கு தெரியாது. மற்றொரு நண்பர் கூறினார், இந்த வயதிற்கு தாய்மொழி போதும் என்று. 
வேறு வேறு தலைப்புகளுக்கு பேச்சு மாறியது, சிறிது நேரத்தில் கூட்டமும் கலைந்தது. 

3 comments:

  1. அழகான பதிவு. நம் காலத்துப் பெற்றோர்கள் குழந்தைகளை நிகழ்காலத்தில் வாழவிடுவதே இல்லை. 2 வயது முடிவதற்குள்ளேயே நாளைக்கு பெரிய டாக்டர் ஆகவேண்டும், எஞ்சினியர் ஆகவேண்டும் என்று கனவுகளின் பொதிமூட்டையை சுமத்தி, பாடங்களை பிரதி எடுக்கும் தேர்ந்த ஜெராக்ஸ் மிஷினாக்கி விடுகின்றனர்.

    ReplyDelete
  2. பொதுவாக குழந்தைகளுக்கு 5 வயது கடந்த பிறகுதான் மூளை வளர்ச்சி, உடல் திறன் வளர்ச்சி,அதன் பிறகு பள்ளியில் சேர்த்தால் குழந்தைகளின்
    கவனிக்கும் திறன், புரிந்துகொள்கிற பக்குவம் வரும் எந்துரு ஒரு நரம்பியல் வல்லுநர் சொல்லுகிறார்.
    இன்னும் கூடுதலாக தனது தாய்மொழியில் கற்றால் குழந்தைகளுக்கு சுய சிந்தனை திறன் மிக்க வர்களாக வளர்வார்கள் என்கிறார் 5 வகுப்பிற்கு பிறகே பிறமொழி பாடம் கற்பிக்க படவேண்டும் என்கிறார். அதாவது முதலில் தாய்மொழி கல்வி அடுத்ததுதான் பிறமொழி
    அது குறித்து உங்கள் கருத்து என்ன

    ReplyDelete
  3. அது அது தான் என்கருத்தும்....நன்றி தோழரே! நன்றி ஜானகிராமன்.

    ReplyDelete