Monday, September 6, 2010

நிறம்

ஆதிக்கு பழங்கள் படங்களை காட்டி அடையாளம் காண செய்துகொண்டிருந்தேன் போன வாரம். ஞாயிற்று கிழமை தானே நேரம் கிடைக்கிறது ரசனையான வேலைகள் செய்வதற்கு. சக்கரம் போன்ற ஜவ்வரிசி வடகங்கள் பல நிறங்களில் கிடைத்தது - நூறு கிராம் 8 ரூபாய் தான். போரிதுகொடுத்து நிறங்கள் சொல்லிகொடுத்தேன். வெள்ளை, பச்சை, மஞ்சள், ஆரஞ்சு என்று....ஆதி ரசித்து சாபிட்டான்,  நானும் அவன் சாப்பிடுவதை ரசித்தேன். இது என்ன கலர்? பச்சை என்று சொன்னவுடன் பச்சை சொல்லி சாபிட்டான்..., அடுத்து மஞ்சள், சிகப்பு, நீலம்...ஆரஞ்சு சொன்னவுடன் ஆதி கேட்டான் அப்ப சாத்துக்குடி கலர் எங்கே? முந்திரிபழம் (திராட்சையை அப்படி தான் கூறுவான்) கலர் எங்கே என்று... தோற்றுபோனேன் மகனிடம்.

1 comment:

  1. அழகான... இனிமையான பதிவு. பெரும்பாலும், குழந்தைகளுக்கு கற்றுத் தரும்போது, நாம் தான் அவர்களிடமிருந்து கற்றுக்கொள்கிறோம்..,

    ReplyDelete