Monday, September 6, 2010

மதிப்பு

24 மணி நேரம் தான் எல்லோருக்கும். எப்படி எனக்கு என் நேரம் முக்கியமோ அப்படியே எல்லோருக்கும். அதிகம் சம்பாதிக்கும் பில் கேட்சின் நேரம் விலை அதிகம்னோ துப்பரவு பணியாளுடைய நேரம் விலை கம்மின்னு மதிப்பிட முடியாது. துப்புரவுப் பணியாளர் ஒரு நாள் விடுப்பு எடுத்தால், நம் சுற்றுபுறம் நாறும். அப்பொழுது தெரியும் அவர்கள் மதிப்பு. 

இது வேலை பார்ப்பவர், இல்லத்தரசி எல்லோருக்கும் பொருந்தும். அலுவலத்துக்கு தாமதமா வந்தா loss of pay போடலாம், வாங்கும் சம்பளத்தை பொறுத்து;  வீட்டுக்கு தாமதமா போனா ஒரு தாயா / மனைவியா loss of pay எப்படி கணக்கிடமுடியும்? ஒரு தாயோட விலையை நிர்நயன் பண்ண முடியுமா? ஒரு கணவனுக்கு என்னொரு மனைவி கிடைக்கலாம், ஆனால் குழந்தைக்கு தாய் கிடைக்குமா?

இந்தய அரசாங்கம் இல்லத்தரசிகளை, பாலியல் தொழிலாளிகள், பிச்சைகாரர்கள் மற்றும் சிறை கைதிகள் பட்டியலில் இணைத்திருப்பதை (2001 ம் ஆண்டு மக்கள்தொகை கணக்கெடுப்பின் படி) என்னால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை. 

1 comment:

  1. அமினா, நியாயமான, கோபப்படவேண்டிய கேள்வி. சென்செஸ் அமைப்புக்கும் கடிதம் எழுதுங்கள்.

    5 வது வரியில் //துப்பறியும் பணியாளர்// எழுத்துப் பிழை உள்ளது. "துப்புரவுப் பணியாளர்" என்று வரவேண்டும். திருத்திக்கொள்ளவும்.

    ReplyDelete