Thursday, September 2, 2010

குழந்தை பாடிய தாலாட்டு...

சென்ற வாரம் நாங்கள் குடும்பத்தோடு பாண்டிச்சேரி சென்றிருந்தோம், ஒரு திருமணத்தில் கலந்துக்கொள்ள. குடும்பமாக சென்ற முதல் ரயில் பயணம் என்பது ஒரு சிறப்பு, அதனால் அசதி தெரியவில்லை. திருமணம் மாலை 5 மணிக்கு மேல் ஆரம்பித்து, பின் வரவேற்பும் அங்கேயே தொடர்ந்தது. அறைக்கு வர இரவு 9 மணி ஆகிவிட்டது. வரும்போது, என் பள்ளியில் படித்த தோழி கைபேசியில் அழைத்தாள். எங்களை வந்து பார்பதாக சொன்னாள். அவளும் ஒரு திருமணத்திலிருந்ததால் தாமதம். அவளும் அவளுடைய கணவரும் வந்தார்கள் 11 மணிக்கு. பழைய கதைகள் பேசினோம், இருவரும் அகமகிழ்ந்து. இரு கணவர்களும் வியப்புடன் நட்பு பாராட்டினர். 11 . 30 இருக்கும் அவர்கள் செல்லும்போது. நாங்கள் மறுநாள் காலை 5. 30 க்கு காரைக்கால் வண்டியை பிடிக்க திட்டமிட்டிருந்தோம். 11 .45 க்கு உறங்க தயாரானோம். கைபேசியில் காலை 4 . 30 க்கு எழுப்ப ஏற்பாடு செய்துவிட்டு விடிவிளக்கு மட்டும் எரியவிட்டு படுக்கப்போனோம். ஆதி கெஞ்சினான் "அம்மா விளையாட்டு சாமான்..." தூங்குப்பா ஆதி என்று கூறினார் என் கணவர். ஆதி என்னிடம் கெஞ்சினான். சரி என்று A - Apple, B-Ball, C-Cat மணிச்சட்டம் மாதிரி ஒரு பொம்மை (educative toy)  ஆதி கையில் கொடுத்துவிட்டு நாங்கள் இருவரும் ஆதியின் இருபக்கமாக படுத்தோம். ஆதி பாடியதோ "நிலா நிலா ஓடி வா.., நில்லாமல் ஓடிவா..., " மற்றும் "அம்மா இங்கே வா வா, ஆசை முத்தா தா தா..." ஆதியின் தாலாட்டில் இருவரும் உறங்கி போனோம், ஆதியும் களைப்பிலே உறங்கி விட்டான்.

6 comments:

  1. தோழி கைபேசியில் ..அகம்மகிழ்ந்து,வியப்புடன் நட்பு பாராட்டினர்ஆதியின் தாலாட்டில் இருவரும் உறங்கி போனோம்......nice sentence forming
    தமிழே தெரியாதவர்கள் இப்படி எழுதும்போது
    பொறாமையாக இருக்கு. உங்க எழுத்து style கைவண்ணம் மிக நேர்த்தியாகவே இருக்கு தொடருங்கள்
    உங்கள் நாட்குறிப்பை விட்டு சமூகம், பெண்ணடிமை, குழந்தை தொழிலாளர் .... இப்படி வெளியே வந்து எழுதினால் .....

    ReplyDelete
  2. ஊக்குவிப்பதற்கு நன்றி நண்பரே!

    ReplyDelete
  3. அமினா,
    உங்களின் முதல் பதிவு உங்கள் அறிமுகம் படித்தேன், இன்று உங்கள் பதிவு பக்கம் வந்துள்ளேன்.

    போராடி வெற்றி கண்டவர் நீங்கள். வாழ்த்துக்கள்.
    தொடர்ந்து எழுதுங்கள்.

    தமிழ்மணத்தில் உங்கள் பதிவை இணையுங்கள்.நிறைய பதிவர்களை உங்கள் தொகுப்பு சென்றடையும்.

    வாழ்த்துக்கள் சகோதரி

    ReplyDelete
  4. உங்க தமிழ் நல்லா இருக்கு அமினா. எளிமையான, இயல்பான வார்த்தைச் சரங்கள். ஆதியின் தாலாட்டில் நீங்கள் உறங்கிய நிகழ்வு இனிமை. அடிக்கடி, தமிழிலேயும் ப்ளாக்குங்கள்...

    ReplyDelete
  5. வாழ்த்துகள் அமீ

    ReplyDelete
  6. Super akka.. antha thozhi naanae💞

    ReplyDelete