Wednesday, April 10, 2013

உயிர் வேலியாய் எங்கள் வீட்டை காக்கும் குருவிகள்

எங்கள் வீட்டில் சுற்றிலும் காய்கறிகள் பயிரிட்டிருப்பதால் தினமும் செடி செடியாய் ரசித்து அனுபவிப்பது பழக்கமாகிவிட்டது. தினமும் தண்ணீர் விட்ட பின்பும் தோட்டத்தை விட மனசே வராது. அலுவலகத்திற்கு கிளம்ப வேண்டும், மகனை பள்ளிக்கு அனுப்ப வேண்டுமே என்ன செய்வது என்று சொல்லி கொண்டு தான் தினமும் வீட்டுக்குள் நுழைவேன். இன்றும் அதேபோல் தான் வர மனசே இல்ல, வீட்டு நிலைக்குள் நுழையும் பொது குருவிகள் கூச்சல் அதிகமாக இருந்தது. பக்கத்தில் போய் பார்க்க ஆசை, போனால் தொந்தரவாக இருக்குமே என்று மாடி படிகளுக்கு சென்று எட்டி பார்த்தேன். நிறைய தவிட்டுக்குருவிகள் போட்டி போட்டுக்கொண்டு கொத்திக்கொத்தி சாப்பிட்டுகொண்டிருந்தன. உற்று பார்த்த பொழுது தான் தெரிந்தது, அவை கம்பளி பூச்சிகளை பொருக்கி பசியாறிக்கொன்டிருந்தன. எனக்கு ஒரே ஆச்சர்யம்... எப்படி எங்கள் குடும்பத்தை குருவிகள் காப்பாற்றுகின்றன!!! 

இயற்கை விவசாயம் சின்ன அளவில் செய்ததற்கே இத்தனை நன்மைகள் என்றால் நம் வாழ்கை முழுவதும் இயற்கையாக மாறினால் எவ்வளவு நன்றாக இருக்கும். மனநிறைவோடு உள்ளே வந்தேன்.

4 comments:

  1. பறவைகளையும் மலர்களையும் பச்சை பசேலென்ற செடிகளையும் பார்ப்பதே ஒரு இனிமையான அனுபவம். இயற்கை விவசாய முறையில் இப்பறவைகளை மட்டும் அல்லாது கூடவே அவைகள் மூலம் பயிர்களும் உங்கள் வீடுகளும் காக்கப்படுவது மேலும் மகிழ்ச்சியை ஊட்டும் அனுபவம். மனநிறைவோடு தொடர்ந்து தோட்டத்தை கவனிக்கவும். வாழ்த்துகள்.

    ReplyDelete
  2. Graden!!! It will give a great pleasure espicially we are in depress mood... Great work... Go ahead Amina...

    ReplyDelete