Thursday, April 12, 2012

ஏக்கம்

நான் பயணம் செய்தபோது பஞ்சாயத்து நிர்வகிக்கும் கழிப்பறையை உபயோகிக்க நேர்ந்தது. வெளியேறும்பொது ஒரு குழந்தை "அம்மா...அம்மா.." என்று அழுதுகொண்டிருந்தது. வெளியேறும் ஒவ்வொரு முகத்தையும் பார்த்து அம்மாவை எதிர்பார்த்து ஏமாற்றத்தில் அழுதுகொண்டிருந்தது. அந்த அழுகை என்னை மிகவும் உலுக்கியதால் அங்கிருந்த பெண் ஒருவரிடம் "ஏன் அந்த குழந்தை அழுதுகொண்டிருக்கிறது?" என்று கேட்டேன். அந்த பெண்ணின் மகள் தான் அந்த குழந்தையின் அம்மாவாம். பஞ்சாயத்தில் துப்புரவு பணியாளராக இருப்பதால் பணிக்கு சென்றிருக்காராம். செல்லும்போது குழந்தை விளையாடி     கொண்டிருந்ததால் வேலைக்கு செல்ல அனுமதிக்காது என்பதால் கழிப்பறையை பயன்படுத்த உள்ளே செல்வதுபோல் சென்று குழந்தை வேறுபக்கம் விளையாடிய பொழுது பணிக்கு சென்றுவிட்டாராம். அதனால் தான் வெளியேவரும் ஒவ்வொருவரையும் பார்த்து இந்த முறை என் அம்மா வரமாட்டாரா என்ற ஏக்கத்தில் அழுவதாக கூறினார். 

வேலைக்கு போகும் அம்மக்களுக்கு குழந்தையை பிரிந்த ஏக்கம் இருக்கும், அலுவலகத்திலோ ஒவ்வொரு அசைவும் தன் குழந்தையை நினைவுபடுத்தும். குழந்தைக்கோ அம்மா திரும்பிவரும் வரை அம்மாவின் நினைல் ஏக்கத்துடன் காத்திருக்கும். வேலைக்கு போகும் தாயின் விலை இரண்டு பேரின் ஏக்கம்.