Wednesday, April 17, 2013

தினம் ஒரு இயற்கை தரும் அன்பளிப்பு

எதிர்பார்ப்பு 

நேற்று அவசரமாக அலுவலகம் கிளம்பிக்கொண்டிருந்தேன். என் கணவர் கூப்பிட்டார், "இங்கே வந்து பாரேன், யார் வந்திருக்காங்கன்னு..." எங்கள் வீட்டு ஜன்னலுக்கு பக்கத்தில் உள்ள வாழை மரத்தில் ஒன்று, அதற்க்கு பக்கத்தில் மற்றறொரு வாழை மரத்தில் இன்னொன்றுமாக ஒரு ஜோடி பறவைகள். இதற்கு முன்பாக அப்படி ஒரு பறவையை பார்த்ததே கிடையாது. தலையிலிருந்து உடல் மர  நிறம். தோகையோ சந்தன நிறம். அவ்வளவு அழகு. உண்மையான பெயர் தெரியாததாலும், ஜோடியாக வந்ததாலும் அவகளுக்கு ஜோடிக்குயில் னு பெயர் வைத்து பிரம்மித்துக்கொண்டிருந்தோம். படம் பிடிக்கணும்னு தோணவே இல்லை. எங்களிடம் புகைப்படக்கருவியும் இல்லை.  உணவு இடைவேளை சமயம் வேகமாக வீட்டிற்கு வந்து வலையை தேடி தேடி பார்த்தாலும் அந்த பறவையை ஒத்த ஒன்றை பார்க்கவே முடியவில்லை. இன்றாவது அவைகள் வரும் என்ற எதிர்பார்ப்போடு ஒவ்வொரு காலையையும் எதிர்நோக்குகிறோம். 

பூரிப்பு 

இன்று பார்த்தால் இயற்கை எங்களுக்கு எதிர்பாராத சந்தோசத்தை கொடுத்தது. வாசலில் உள்ள மூன்று மலர்கள் பூத்திருந்தன முதல்முறையாக. முதலில் நான் பார்த்தது வெள்ளை அரளி பூ, பக்கத்திலே ஒரு சிகப்பு ஒற்றை செம்பருத்திப்பூ அடியிலே ஒரு மஞ்சள் ஜினியா பூ. எனக்கா ஒரே பூரிப்பு.....

4 comments:

  1. Really very happy about you Amina... This explicited about your happy life. If you are not happy in your life , how u like nature!!! The way u wrote i impressed a lot. God bless you dear Amina...

    ReplyDelete
  2. this incident tells me how to look at the life and enjoy every moment.. very impressive akka..

    ReplyDelete
  3. this incident tells me how to look at the life and enjoy every moment.. very impressive akka..

    ReplyDelete