Wednesday, September 8, 2010

விலையும் விவசாயமும்

ஆறாவது ஊதிய குழு பரிந்துரை செய்தபடி ஊதியத்தை உயர்த்தியதோ மத்திய மற்றும் மாநில அரசாங்க ஊழியர்களுக்கு மட்டும் தான். சில தனியார் கம்பனிகளும் ஊதியத்தை உயர்த்தினார்கள் ஆனால் பரிந்துரையின் படி அல்ல. விவசாயிகள், வியாபாரிகள், சுயதொழில் செய்பவர்கள் தான் உண்மையான பாதிப்பிற்குள்ளனார்கள். இரண்டு ரூபாய்க்கு பயணித்த பேருந்துகளை காணவில்லை (வடிவேல் ஏதோ படத்தில் கிணறு காணவில்லை என்று  கூறுவாரே அது போல...). வருவதென்னவோ தாழ்தள பேருந்தாம்! குறைந்த பட்ச கட்டணம் 5 ரூபாயாம். 

பெட்ரோல் மற்றும் டீசல் விலையேற்றம் பாமரனுக்கு அவசிய தேவைகள் எட்டாக்கனி ஆகியது. மத்திய மற்றும் மாநில அரசாங்க ஊழியர்கள் மட்டும் தான் பேருந்தில் பயணம் செய்கிறார்களா என்ன? கேட்டால் பெட்ரோல் மற்றும் டீசல் விலையேற்றம் சர்வதேச சந்தை நிலவரத்தை பொறுத்துன்னு சொல்லிடுவாங்க! அந்த விலையேற்றத்தால் அரிசி, பருப்பு, போன்ற எல்லா பொருட்களும் விலையேறின. ஏறி விலை விவசாயிக்கு சென்றடைந்ததா? இல்லையே... காய்கறி விவசாயி மட்டும் காலம் முழுக்க சூழ்நிலை கைதி தாங்க. முகூர்த்த நாட்களில் தக்காளி 40 ரூபானா மழை காலத்தில் ரூபாய்க்கு ரெண்டு கிலோ. இதே நிலை தான் எல்லா காய்கறிகளுக்கும். காய்க்கு தான் விலை கிடைக்கல, எடத்துக்கு நல்ல விலையாம்...


பாவம் விவசாயி, நிலத்தை வந்த விலைக்கு வித்திடுவான். அப்படி செய்தால் விவசாயத்துக்கு வாங்கிய கடனையாவது அடைக்க முடியும். இருக்கவே இருக்கு ஒரு ரூவா அரிசி, இலவச தொலைக்காட்சி நாள் பூரா நாடகம் பார்க்கநடந்ததை மறக்க டாஸ்மாக்....
நாளைய விவசாயம் ?

6 comments:

  1. உண்மைதாங்க, எல்லா விவசாயிகளின்
    மகன்களும் விவசாயத்தை விட்டு
    வேறு தொழிலுக்கு மாறிட்டு
    இருக்காங்க, வேறு வழி!!!

    ReplyDelete
  2. 10thoda pathinonnaa (11 th) follower ayitten.
    ungal sinthanai nantraaga irukkirathu.
    thodarungal. nantri.
    valga valamudan.

    ReplyDelete
  3. விலையும் விவசாயமும் என்கிற குறுங்கட்டுரை, தற்போதைய ஒவ்வொரு விவசாயின் மனநிலையை படம் பிடித்து காட்டுவதாக இருக்கிறது. தொடரட்டும் இதுபோன்ற பதிவுகள், குறைந்தபட்சம் வாரம் ஒன்று.

    ReplyDelete